அமெரிக்க நாட்டின் ஓகியோ மாகாணத்தில் உள்ள ஒரு கார் விற்பனை மையத்தின் சிறிய விமானம் ஒன்று விழுந்தது. இதில்,2 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகிறது.
அமெரிக்க நாட்டில் உள்ள ஓகியோ மாகாணத்தில் இயங்கி வரும் பிரபல கார் விற்பனை மையம் ஒன்றில் இன்று சிறிய ரக விமானம் ஒன்று விழுந்து விபத்து ஏற்பட்டது.
இந்த விமானம் வானில் பறந்து கொண்டிருக்கும்போது, விமானியின் கட்டுப்பாட்டை இழந்து மரியெட்டா என்ற நகரில் அமைந்துள்ள கார் விற்பனை மையத்தின் மீது விழுந்தது.
இதில், அங்கிருந்த கார்கள் முழுவதும் தீ பிடித்து எரிந்தது. இதில், விமானத்தில் பயணித்த விமானி உட்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல் வெளியாகிறது.