அமெரிக்காவை சேர்ந்த பைசர் மற்றும் ஜெர்மனியின் பயோன்டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசியை பல நாடுகள் பயன்படுத்தி வருகின்றன. அந்த வகையில் நெதர்லாந்தில் 47,000 சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.
இந்நிலையில், பைசர் தடுப்பூசி போட்டு இறந்த அனைவருமே 80 வயதுக்கு மேற்பட்டவர்கள். இவர்கள், நார்வேயில் உள்ள நர்சிங் ஹோம்களில் வாழ்ந்த முதியவர்கள். இவர்கள் பைசர் தடுப்பூசியைப் பயன்படுத்தியபின் காய்ச்சல் போன்ற சில சிரமங்களை சந்தித்தபின் இறந்தனர் என நார்வே நாட்டின் மருத்துவ நிறுவன இயக்குனர் தெரிவித்துள்ளார்.