இலங்கையில் பெட்ரோல் விலை குறைப்பு ...மக்கள் மகிழ்ச்சி

திங்கள், 3 அக்டோபர் 2022 (22:03 IST)
இலங்கையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு பெட்ரோல் விலை குறைப்பு அமலுக்கு வந்துள்ளது.

இலங்கையில் சில மாதங்கள் முன்னதாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் மக்கள் உணவுப் பொருட்களுக்கே திண்டாடும் நிலை ஏற்பட்டது. பெட்ரோல், கியாஸ், உணவுப் பொருட்கள் விலை விண்ணை தொட்டது.. இதனால் மக்கள் போராட்டம் வெடித்த நிலையில் அரசியல்வாதிகள் பலரின் வீட்டை தீக்கிரையாக்கினர்.

பின்னர் இலங்கையில் அதிபராக ரணில் விக்ரமசிங்கெ பொறுப்பேற்றுக் கொண்டார். இலங்கையில் நிலைமை கட்டுப்பாட்டிற்கு வந்துள்ள நிலையில் கோத்தபய ராஜபக்சே மீண்டும் இலங்கை சென்றடைந்தார்.

இந்த நிலையில் அவ்வப்போது விலைவாசி உயர்வால் மக்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் இலங்கையில் பெட்ரோல் விலை குறைப்பு அமலுக்கு வந்துள்ளது.

இந்த விலைகுறைப்பு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது, எனவே,92 ரக பெட்ரோல் விலை ரூ.40 குறைக்கப்பட்டு, ஒரு லிட்டர் ரூ.210 க்கு விற்பனையாகிறது.  95 ரக பெற்றோல் ஒரு லிட்டருக்கு ரூ.30 குறைக்கப்பட்டு, ரூ.510 க்கு விற்பனையாகிறது.

ஓரளவு பெட்ரோல் விலை குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

Edited by Sinoj

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்