ஜன்னல் இருக்கைக்காக நடுவானில் அடித்துக் கொண்ட பயணிகள் : அவசரமாக கீழிறக்கப்பட விமானம்

திங்கள், 7 நவம்பர் 2016 (11:00 IST)
நடுவானத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்தில், இருக்கை தொடர்பான பிரச்சனையில் இரு பயணிகள் சண்டையிட்டுக் கொண்ட விவகாரம் வெளியே கசிந்துள்ளது.


 

 
பெல்ஜியம் நாட்டின் புருசெல்ஸ் நகரில் இருந்து மால்டாவிற்கு ஒரு விமானம் பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.  இத்தாலி நாட்டின் எல்லைக்குள் 30 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருந்தது. அப்போது விமானத்தில் இருந்த இரு பயணிகளுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். மேலும், விமானத்தின் கதவையும் திறக்க முயன்றனர்.
 
இதைக்கண்ட பணிப்பெண்களும், மற்ற பயணிகளும் அவர்களை தடுக்க முயன்றனால். ஆனால், அந்த 2 பேரும், அவர்களையும் தாக்கினர். இது குறித்து உடனே விமானிக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இத்தாலியில் உள்ள ஒரு விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. 
 
விமான நிலைய காவல் அதிகாரிகளிடம் அவர்கள் இருவரும் ஒப்படைக்கப்பட்டார்கள். இருக்கையில் மாறி அமர்வது தொடர்பாக அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் எழுந்ததாகவும், அதனால் சண்டை ஏற்பட்டதாகவும் ஒரு சக பயணி தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்