எனவே தொடர் புகார் காரணமாக அமேசான் நிறுவனத்துடன் இணைந்து காவல்துறை சில அதிரடி நடவடிக்கைகள் எடுத்து உள்ளது. அதன்படி, நியூஜெர்சி மாகாணத்தில் அதிகாரிகள் டம்மி பார்சல்களை அதாவது பார்சல்களுக்குள் வெறும் ஜிபிஎஸ் கருவியை வைத்து வீடுகளுக்கு வெளியே வைத்துவிட்டனர். கதவுக்கருகில் ரகசிய கேமராவும் பொருத்தபட்டது. இதற்கு நல்ல பலனும் கிடைத்துள்ளது.
கிறிஸ்துமஸ் வரவுள்ளநிலையில் 900 மில்லியன் பேக்கேஜுகளை அமெரிக்க தபால் சேவை நிறுவனம் விநியோகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னர் அமேசான் நிறுவனம் அமேசான் கீ எனும் சேவையை அறிமுகப்படுத்தியது. இதன்மூலம் பார்சல் விநியோகம் செய்பவர்கள் ஒரு செயலியின் உதவியோடு கதவை திறந்து வீட்டுக்குள் பார்சலை வைத்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.