பிரதமர் மோடிக்கு பாகிஸ்தானில் ஆதரவு!

புதன், 16 நவம்பர் 2016 (12:38 IST)
கருப்பு பணத்தையும், கள்ள பணத்தையும் ஒழிக்க 500, 1000 ரூபாய் நோட்டுகளை தடை செய்வதாகவும் அதற்க பதிலாக புதிய 500, 2000 நோட்டுகளையும் வெளியிட்டுள்ளனர். பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பை பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் வரவேற்றுள்ளார்.


 
 
பிரதமர் மோடியின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் வரவேற்பும், சிலர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனனர். இந்நிலையில், கருப்பு பண விவகாரத்தில் பிரதமர் மோடி எடுத்த நடவடிக்கை மிகவும் பாராட்டத்தக்கதது என்று பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் வரவேற்பும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.
 
பிரதமர் மோடியின் இந்த நடவடிக்கையால் உலக நாடுகள் பலவற்றிலும் மோடியை பற்றியே பேசப்படுகிறது. நேபாளம், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளும் இந்த நடவடிக்கையை தங்கள் நாட்டில் பின்பற்ற உள்ளன. ஐக்கிய நாடுகள் சபையும் பிர்தமர் மோடியின் இந்த நடவடிக்கையை பாராட்டி ஐநாவில் உரையாற்ற அழைத்திருப்பதாக கூறப்படுகிறது.

 

வெப்துனியாவைப் படிக்கவும்