பெண்கள் குறைவான ஆடை அணிவதே பாலியல் குற்றங்களுக்குக் காரணம்… பாகிஸ்தான் பிரதமர் கருத்துக்கு மனைவிகள் எதிர்ப்பு!

வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (14:38 IST)
பாகிஸ்தான் பிரதமரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் சமீபத்தில் ஒரு சர்ச்சையானக் கருத்தை தெரிவித்து சர்ச்சையில் சிக்கிக்கொண்டுள்ளார்.

பாகிஸ்தானில் அதிக எண்ணிக்கையில் பாலியல் அத்துமீறல் குற்றச்சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆண்கள் சபலப்படுவதை தவிர்க்க, பெண்கள் தங்கள் உடல்பாகங்களை வெளிக்காட்டுவதை தவிர்க்க வேண்டும். அப்போதுதான் பாலியல் குற்றங்கள் நடக்காது எனப் பேசினார்.

அவரின் பேச்சு சர்ச்சைகளைக் கிளப்பிய நிலையில் இப்போது இம்ரான் கானின் முன்னாள் மனைவிகளே அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்