பெண்ணுடன் தகாத உறவு வைத்திருந்த சிறுவன்: ஆணுறுப்பை துண்டித்த கொடூரம்!

வியாழன், 13 ஏப்ரல் 2017 (17:29 IST)
பாகிஸ்தானில் 9-ஆம் வகுப்பு படித்து வந்த 15 வயதான மாணவன் பெண் ஒருவருடன் தகாத உறவு வைத்திருந்ததால் அவனது கண்கள் பிடுங்கப்பட்டு, ஆணுறுப்பு துண்டிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
 
பாகிஸ்தானின் லாகூரை சேர்ந்த 15 வயது சிறுவன் பள்ளி ஒன்றில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தான். அவனுக்கும் அங்குள்ள ஒரு பெண்ணுக்கும் தகாத உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விசயத்தை அறிந்த அந்த பெண்ணின் பெற்றோர் அந்த சிறுவனை பழிவாங்க துடித்தனர்.
 
சம்பவம் நடந்த அன்று மாணவன் பள்ளியை விட்டு வெளியே வந்த போது அந்த பெண்ணின் தந்தை சில அடியாட்களுடன் சென்று சிறுவனை கடத்தி மறைவான இடத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு வைத்து கத்தியால் சிறுவனின் ஆணுறுப்பை துண்டித்தனர். பின்னர் சிறுவனின் கண்களையும் தோண்டி எடுத்து விட்டு ரோட்டில் அவனை போட்டு விட்டு சென்றனர்.
 
இதனையடுத்து சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அவனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால் சிறுவனின் உயிர் காப்பாற்றப்பட்டது. ஆனால் அவனது கண் பார்வையை மருத்துவர்களால் மீட்க முடியவில்லை.
 
இந்த விவகாரத்தில் பெண்ணின் தந்தைக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ ஒருவரின் ஆதரவு இருப்பதாக சிறுவனின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் நீதிமன்றத்தையும் நாடியுள்ளார். இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் 5 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்