நோ இந்திய திரைப்படங்கள்: பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் காட்டம்

திங்கள், 29 அக்டோபர் 2018 (08:03 IST)
பாகிஸ்தானில் இந்திய திரைப்படங்கள் மற்றும் தொடர்களை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப அந்நாட்டு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
 
பாகிஸ்தானில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்திய திரைப்படங்கள் மற்றும் தொடர்களுக்கு தடை விதிக்க அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
 
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த பாகிஸ்தான் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சாகிப் நிசார், இந்தியா நம்மை அணை கட்டவிடாமல் தடுக்கும் போது அவர்களின் திரைப்படங்களுக்கு தடை விதிப்பதில் என்ன தவறு என கேள்வி எழுப்பினார். இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் தொலைக்காட்சியில் இந்திய திரைப்படங்கள் மற்றும் தொடர்களை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டது.
 
இதேபோல் கடந்த 2016 ஆம் ஆண்டு பாகிஸ்தான் மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணையம் இந்திய திரைப்படங்கள் மற்றும் தொடர்களை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப தடை விதித்தது. இதற்கு பழிவாங்கும் விதமாக சில இந்திய சேனல்களும் பாகிஸ்தான் திரைப்படங்கள் மற்றும் தொடர்களுக்கு தடை விதித்தது.
 
இதனையடுத்து 2017 ஆம் ஆண்டு லாகூர் நீதிமன்றம், மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணையத்தின் தடையை நீக்கி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்