விபத்தை தடுக்க விமான நிலையத்தில் பலியிடப்பட்ட ஆடு

செவ்வாய், 20 டிசம்பர் 2016 (18:19 IST)
பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் நிறுவனம், விமானங்கள் விபத்து ஏற்படாமல் இருக்க விமான நிலையத்தில் ஆடு ஒன்றை பலியிட்டனர்.


 

 
பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் அண்மையில் விபத்துக்குள்ளானது. இதனால் விமானம் இனி விபத்து ஏற்படாமல் இருக்க, நரபலி முறையில் ஆடு ஒன்றை விமான தளத்தில் பலியிட்டுள்ளனர்.
 
விமான நிலைய அதிகாரிகள் ஆடு ஒன்றை விமான ஓடுதளத்தில் வைத்து அதன் கழுத்தை அறுத்து பலி கொடுத்தனர். இதன்மூலம் இனி விபத்து ஏற்படாது என்று நம்புகின்றனர். மேலும் தற்போது ஆட்டை பலியிடும் புகைப்படம் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்