வடகொரியாவின் மீது மேலும் புதிய தடைகள்: ஒன்றுகூடியது ஏனைய நாடுகள்!!

சனி, 8 ஜூலை 2017 (11:42 IST)
வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், மேலும் புதிய தடைகளை வடகொரியாவின் மீது விதிக்க உலக நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.


 
 
கண்டம் விட்டு கண்டம் தாண்டி இலக்கை குறிவைத்து அழிக்கும் புதிய ஏவுகணையை சோசதனையை வடகொரியா சமீபத்தில் நடத்தியது.
 
இதையடுத்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசரமாக கூட்டப்பட்டது. இந்த அவசர கூட்டதில் வடகொரியா மீது மேலும் சில தடைகளை விதிக்க அமெரிக்க கோரிக்கை வைத்தது.
 
இந்நிலையில், வடகொரியாவுக்கு புதிய தடைகளை விதிக்க வேண்டும் என்று ஜப்பான் மற்றும் தென் கொரியா கோரிக்கை விடுத்துள்ளது.
 
இதனால், வடகொரியா மீது மேலும் சில பொருளாதார தடைகள் விரைவில் விதிக்கப்படும் என தெரியவந்துள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்