சிறந்த திரைப்பட விருது அறிவிப்பு - ஆஸ்கர் விருது நிகழ்ச்சியில் குளறுபடி

திங்கள், 27 பிப்ரவரி 2017 (15:55 IST)
இன்று நடைபெற்ற 89வது ஆஸ்கர் விருது வழங்கும் போட்டியில், சிறந்த திரைப்படத்திற்கான விருது தவறுதலாக அறிவிக்கப்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


 

 
ஆஸ்கர் விருது மொத்தம் 24 பிரிவுகளின் கீழ் அறிவிக்கப்படுகிறது. சிறந்த நடிகர், துணை நடிகர், நடிகை, துணை நடிகை, இயக்கம், ஒளிப்பதிவு, பின்னணி இசை, பாடல் உள்ளிட்ட விருதுகள் வழங்கிய பின் இறுதியாக சிறந்த திரைப்படத்திற்கான விருது அறிவிக்கப்படுகிறது. 
 
இந்நிலையி,  விருது அறிவித்தவர் ‘’லா லா லேண்ட்’ படமே சிறந்த திரைப்படத்திற்கான விருதை பெறுவதாக அறிவித்தார். இதனால் மகிழ்ச்சியைடந்த அந்த பட விழாக் குழுவினர் மேடைக்கு வந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர்.
 
அப்போது, நடுவர் குழுவை சேர்ந்த ஒருவர் திடீரென குறிப்பிட்டு, சிறந்த படத்திற்கான விருது ‘லா லா லேண்ட்’ படத்திற்கு என தவறுதலாக அறிவிக்கப்பட்டுள்ளது எனக்கூறியதோடு, ‘மூன் லைட்’ படமே அந்த விருதை பெறுவதாக அறிவித்தார். இதனால், லா லா லேண்ட் படக்குவினர் அதிர்ச்சியடைந்தனர். ஆனால், மூன் லைட் படக்குழுவினர் இதை நம்பவில்லை. எனவே, தொகுப்பாளர் இது நிஜம்தான் எனக் கூறி, அதற்கான அறிவிப்பு தாளையும் மேடையில் காட்டினார். அதன் பின்னரே, அது உண்மை என நம்பிய மூன் லைட படக்குழுவினர், மேடைக்கு வந்து தங்கள் விருதினைப் பெற்று சென்றனர். இதனால்,  விழா அரங்கில் சற்று நேரம் பரபரபபு ஏற்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்