உலகம் முழுவதும் சாமானியர் முதல் பிரபலங்கள் வரை பலரால் பயன்படுத்தப்படும் சமூக வலைதளம் ட்விட்டர். இதை சமீபத்தில் உலக பணக்காரரான எலான் மஸ்க் வாங்கினார். அதுமுதல் ட்விட்டர் பயனாளர்களுக்கு சதா இம்சை தந்து வருகிறார். அதிகாரப்பூர்வ ப்ளூ டிக் வெரிபிகேசனை ப்ளூ, க்ரே, கோல்டன் என மூன்று டிக்குகளாக பிரித்து பணம் வசூலிக்க ஆரம்பித்தார், ட்விட்டர் பணியாளர்கள் பலரை வேலை விட்டு நீக்கினார்.
இதனால் பலரும் ட்விட்டரை விட்டு வெளியேறி வரும் நிலையில் பயனாளர்களை தக்க வைக்க எலான் மஸ்க் புதிய ஐடியாவை அமல்படுத்தியுள்ளார். அதன்படி இனி யூட்யூப் போல ட்விட்டரிலும் பதிவிடும் வீடியோக்களுக்கு பயனாளர்களுக்கு பணம் கொடுக்க ட்விட்டர் முடிவு செய்துள்ளது. யூட்யூப் போல ட்விட்டரிலும் வீடியோக்களுக்கு நடுவே விளம்பரம் இடம்பெறும்.