பாலஸ்தீனை தனி நாடாக அங்கீகரித்த நார்வே, அயர்லாந்து! – கடுப்பான இஸ்ரேல் என்ன செய்தது தெரியுமா?

Prasanth Karthick

புதன், 22 மே 2024 (15:03 IST)
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க கூடாது என இஸ்ரேல் தொடர்ந்து கூறி வரும் நிலையில் நார்வே, அயர்லாந்து நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க முடிவு செய்துள்ளது உலகளாவிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



இஸ்ரேல் – பாலஸ்தீன ஆதரவு ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த ஒரு ஆண்டு காலமாக தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கான பாலஸ்தீன மக்கள் பலியாகியுள்ளனர். இந்நிலையில் உலகளாவிய அளவில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும் பல குரல்கள் எழுந்து வருவதால் இஸ்ரேல் பதற்றமடைந்துள்ளது.

சமீபத்தில் ஐ.நா சபையில் பாலஸ்தீனத்தை நிரந்தர உறுப்பினராக சேர்ப்பது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் அதில் இந்தியா உள்பட பல நாடுகள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக வாக்களித்ததால் அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் இஸ்ரேலின் ஐநா உறுப்பினர் அந்த தீர்மானத்தை கிழித்து போட்டு தன் கண்டனத்தை தெரிவித்தார்.

இந்நிலையில் அடுத்தபடியாக நார்வே அரசு பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய நார்வே பிரதமர் ஜோனாஸ், பாலஸ்தீனத்திற்கு தனி நாடு அங்கீகாரம் அளிக்காவிட்டால் மத்திய கிழக்கில் அமைதி ஏற்படாது. தனிநாடாக செயல்படுவதற்கான அனைத்து உரிமைகளும் பாலஸ்தீனத்திற்கு உள்ளது” என தெரிவித்துள்ளார்.



நார்வேயை தொடர்ந்து அயர்லாந்தும் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க ஆர்வம் காட்டி வருகிறது. நார்வே, அயர்லாந்தின் இந்த செயல்பாடுகள் இஸ்ரேலை கடுப்பின் உச்சத்திற்கு கொண்டு சென்று விட்டதாக தெரிகிறது. இதனால் பதிலடியில் இறங்கிய இஸ்ரேல் அந்த நாடுகளில் இருந்து தனது தூதர்களை திரும்ப பெற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து பேசிய இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் காட்ஸ், பயங்கரவாதத்திற்கு ஆதரவு இருப்பதை உணர்த்தும் வகையில் நார்வே, அயர்லாந்தின் செயல்பாடுகள் இருப்பதாகவும், அவர்கள் இப்படி செய்வதால் ஹமாஸிடம் சிக்கியுள்ள இஸ்ரேலிய பணைய கைதிகளை மீட்பதில் மேலும் சிக்கல் உண்டாவதாகவும் கூறியுள்ளார்.

மேலும் ஸ்பெயினும் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க யோசித்து வரும் நிலையில், அப்படி செய்தால் ஸ்பெயினில் இருந்தும் தூதர்களை திரும்ப பெற்றுக் கொள்வோம் என்று நேரடியாகவே கூறியுள்ளது இஸ்ரேல்.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்