அனுமதி மறுத்தாலும் பாலஸ்தீன ஆதரவு பேரணி நடத்தப்படும்: கே.சுதாகரன் திட்டவட்டம்

புதன், 15 நவம்பர் 2023 (13:53 IST)
பாலஸ்தீன ஆதரவு பேரணிக்கு அனுமதி மறுத்தாலும் திட்டமிட்டபடி பேரணி நடத்தப்படும் என கே சுதாகரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 
 
கேரள மாநில காங்கிரஸ் தலைவர் கே சுதாகரன் தலைமையில் கோழிக்கோடு பகுதியில் பாலஸ்தீன நாட்டிற்கு ஆதரவாக பேரணி நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் மாவட்ட ஆட்சியர் அனுமதி மறுத்துவிட்டார். 
 
இந்த நிலையில் பேரணிக்கு அனுமதி அளித்தாலும் சரி அளிக்காவிட்டாலும் சரி திட்டமிட்டபடி நவம்பர் 23ஆம் தேதி கோழிக்கோடு கடற்கரையில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பேரணி நடத்தப்படும் என்றும்  அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.  இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  
 
பாலஸ்தீன ஆதரவு பேரணிக்கு முதலில் அனுமதி வழங்கப்பட்டதாகவும் அதன் பின்னர் திடீரென அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் சுதாகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்