சீனாவை அடுத்து இங்கிலாந்திலும் நோரோ வைரஸ்: மருத்துவமனைகள் நிறைவதாக தகவல்!
வெள்ளி, 27 ஜனவரி 2023 (15:19 IST)
சீனாவில் கடந்த சில நாட்களாக நோரோ வைரஸ் மிக வேகமாக பரவி வருவதாக கூறப்பட்ட நிலையில் தற்போது சீனாவை அடுத்து இங்கிலாந்திலும் நோரோ வைரஸ் பரவி வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.
இங்கிலாந்தில் நோரோ வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதன் காரணமாக அந்நாட்டில் உள்ள மருத்துவமனைகள் நிரம்பி கொண்டு வருவதாகவும் விரைவில் முழுமையாக நிரம்பிவிடும் என்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தினசரி நாட்டில் சராசரியாக 371 பேர் நோரோ வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருவதாகவும் கடந்த வாரத்தை விட இந்த வாரம் 8 சதவீதம் அதிகமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்
குறிப்பாக குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் தான் நோரோ வைரஸ் தாக்குதலுக்கு அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதாக இங்கிலாந்து சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.