நைஜீரியாவில் கட்டட விபத்து: 70 உடல்கள் மீட்பு

வியாழன், 18 செப்டம்பர் 2014 (14:55 IST)
நைஜீரியாவில் தேவாலயத்துக்குச் சொந்தமான விருந்தினர் விடுதிக் கட்டடம் ஒன்று சரிந்து விழுந்ததில் பலியானோரின் எண்ணிக்கை 70 ஐ எட்டியுள்ளது.


 


விருந்தினர்கள் தங்குவதற்காக அமைக்கப்பட்ட இரண்டு மாடிகளைக் கொண்ட கட்டடத்தில் கூடுதல் மாடிகள் கட்டும் பணி நடந்து வந்தது.

இந்நிலையில், இரவு திடீரென இந்தக் கட்டடம் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் இக்கட்டடத்தின் இடிபாடுகளில் சிக்கி சுமார் 70 பேர் உயிரிழந்துள்ளதாக மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த 67 பேர் பலியாகியுள்ளனர். இதனால் இச்சம்பவத்திற்கு தென் ஆப்ரிக்க தலைவர் ஜேக்கப் ஜூம்பாவே கண்டனம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்