ஒரே ஒருவருக்கு கொரோனா: மீண்டும் ஊரடங்கை அமல்படுத்திய பிரதமர்!

செவ்வாய், 17 ஆகஸ்ட் 2021 (18:21 IST)
நியூசிலாந்து நாட்டில் கடந்த 6 ஆண்டுகளாக ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு இல்லாத நிலையில் தற்போது ஒரே ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
நியூஸிலாந்து நாட்டில் கடந்த ஆறு மாதங்களாக கொரோனா பாதிப்பு என்பதே இல்லை என்பது பெரும் ஆச்சரியமாக இருந்தது. அந்நாட்டில் உள்ள பொதுமக்கள் மிகுந்த கட்டுப்பாட்டுடன் கொரோனாவுக்க்கு எதிரான வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து வந்ததே அந்நாட்டில் கொரோனா இல்லாமல் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சமீபத்தில் நியூசிலாந்தின் முக்கிய நகரமான ஆக்லாந்தில் 58 வயது நபர் ஒருவருக்கு டெல்டா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து ஆக்லாந்து மட்டுமின்றி நாடு முழுவதும் மூன்று நாட்களுக்கு ஊரடங்கு என அந்நாட்டின் பிரதமர் ஜெசிகா அறிவித்துள்ளார்
 
லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளில் எல்லாம் ஊரடங்கு தளர்த்தப்பட்டு வரும் நிலையில் ஒரே ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்