முன்பு டீ மாஸ்டர்; தற்போது காய் விற்கும் பெண் : இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

வியாழன், 3 நவம்பர் 2016 (10:26 IST)
நேபாள நாட்டைச் சேர்ந்த காய்கறி விற்கும் பெண்ணின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.


 

 
சில நாட்களுக்கு முன்பு, பாகிஸ்தானில் ஒரு டீ கடையில் மாஸ்டராக பணிபுரிந்து வந்த அர்ஷத்கான் என்பவரின் புகைப்படம் வைரலாக பரவியது. அவரின் நீல நிற கண்கள் மூலம் அவர் பலரையும் வசீகரித்தார். அதன்பின், அவர் சில நிறுவனங்களுக்கு மாடலாகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
 
தற்போது நேபாள நாட்டைச் சேர்ந்த காய்கறி விற்கும் பெண்ணின் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. அர்ஷத்கான் தனது நீல நிறக் கண்கள் மூலம் புகழடைந்தார் என்றால், இந்த பெண் தனது வசீகர சிரிப்பு மற்றும் கடுமையான உழைப்பின் மூலம் பலரை கவர்ந்துள்ளார்.
 
நேபாள நாட்டை சேர்ந்த அப்பெண்ணின் பெயர் குஸும் ஸ்ரேஸ்தா. பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இவரின் பெற்றோர்கள் விவசாயிகள். எனவே அவர்களுக்கு உதவியாக, பள்ளி முடிந்ததும் தெரு தெருவாக சென்று காய்கறி விற்கிறார்.

இவர் காய்கறி மூட்டையை தூக்கி வரும் காட்சி மற்றும் ஸ்டைலாக செல்போன் பேசும் காட்சி அனைத்தும் புகைப்படமாக வெளிவந்துள்ளது.


 
 
ஒருபக்கம் இவரும், அர்ஷத்கானும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
 
டீ மாஸ்டாராக இருந்து, சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி மாடலானர் அர்ஷத்கான். அதேபோல், இந்த பெண்ணும் புகழ் அடைவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்