ரஷ்யாவால் விண்வெளி மையத்தில் பஞ்சாயத்தா? – நாசா விளக்கம்!

புதன், 16 மார்ச் 2022 (11:00 IST)
ரஷ்யா மீது அமெரிக்கா விதித்து வரும் பொருளாதார தடைகளால் விண்வெளி மையத்தில் இரு நாடுகளிடையே பிரச்சினை எழலாம் என கூறப்பட்ட நிலையில் நாசா விளக்கம் அளித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ள நிலையில் அமெரிக்கா, ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இதனால் பூமியில் ரஷ்யா – அமெரிக்கா இடையே எழுந்துள்ள மோதல் விண்வெளி வரை எதிரொலித்துள்ளது. சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் ரஷ்யா, அமெரிக்கா நாடுகள் இணைந்து ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் ரஷ்யா சர்வதேச விண்வெளி மையத்தில் தனது செயல்பாட்டை நிறுத்தினால் விண்வெளி மையம் பூமியில் விழும் என்று ரஷ்ய விண்வெளி ஆய்வு நிறுவனமான ரோஸ்கோஸ்மாஸ் எச்சரித்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள அமெரிக்காவின் நாசா “ர்வதேச விண்வெளி மையத்தில் அமெரிக்க - ரஷியா ஒத்துழைப்பின் அடிப்படையில் எதுவும் மாறவில்லை. நாங்கள் இன்று இருப்பதைப் போலவே தொடர திட்டமிட்டுள்ளோம்.” என்று தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்