சந்திரயான்-2 வின் விக்ரம் லேண்டர் கண்டுபிடிப்பு: நாசா அதிகாரபூர்வ அறிவிப்பு

செவ்வாய், 3 டிசம்பர் 2019 (07:24 IST)
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய இஸ்ரோ விஞ்ஞானிகள் கடந்த சில மாதங்களுக்கு மு  அனுப்பிய சந்திராயன் 2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி நிலவின் தென் துருவத்தை நெருங்கிய சந்திராயன் 2 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர்தரையிறக்கப்பட்டது
 
இந்த நிலையில் நிலவில் இருந்து 400 மீட்டர் தொலைவில் இருந்த போது திடீரென விக்ரம் லேண்டரில் இருந்து தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த இஸ்ரோ விஞ்ஞானிகள் மீண்டும் லேண்டருடன் தொடர்பு ஏற்படுத்த தீவிர முயற்சி செய்தனர். இருப்பினும் விக்ரம் லேண்டர் என்ன ஆனது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை 
 
இதனை அடுத்து இஸ்ரோ மற்றும் நாசா விஞ்ஞானிகள் தொடர்ந்து விக்ரம் நிறைய கண்டுபிடிக்க தீவிர முயற்சி செய்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. நிலவை சுற்றி வரும் சந்திராயன் 2வின் ரோவர் விண்கலம் லேண்டரை கண்டுபிடித்தது. இருப்பினும் அதனை செயல்படுத்த வைக்க முடியவில்லை 
இந்த நிலையில் சற்று முன் நாசா தனது டுவிட்டர் பக்கத்தில் விக்ரம் லேண்டர் தரையிறக்கப்பட்ட பகுதி கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அந்த பகுதியில் விக்ரம் லேண்டர் நொறுங்கி விழுந்த பொருட்கள் இருப்பதாகவும் அறிவித்துள்ளது 
 
அதுமட்டுமின்றி இது குறித்த புகைப்படம் ஒன்றையும் நாசா வெளியிட்ட தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. இதனை அடுத்து நாசா மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் விக்ரம் லேண்டர் மீண்டும் செயல்படுத்த வைக்க முடியுமா என்று முயற்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது

The #Chandrayaan2 Vikram lander has been found by our @NASAMoon mission, the Lunar Reconnaissance Orbiter. See the first mosaic of the impact site https://t.co/GA3JspCNuh pic.twitter.com/jaW5a63sAf

— NASA (@NASA) December 2, 2019

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்