பூமிக்கு அருகில் பூமியை போன்ற கிரகம்: நாசா தகவல்

வியாழன், 25 ஆகஸ்ட் 2016 (17:37 IST)
பூமியை போன்று மனிதர்கள் வாழ தகுதியுள்ள கிரகம் நமது சூரிய குடும்பத்திற்கு அருகில் உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளானர்.


 

 
நமது சூரிய குடும்பத்திற்கு அப்பால் மனிதர்கள் வாழ தகுதியுள்ள கிரகங்கள் பல உள்ளன என்று அண்மையில் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
 
அனால் தற்போது கண்டுபிடித்துள்ள புதிய கிரகம் நமது சூரிய மண்டலத்தில் இருந்து சுமார் 4.2 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 
 
இது பூமியை போன்றுள்ள மற்ற கிரகங்களை விட அருகில் உள்ளதால், இதை மற்றொரு பூமி என்று அழைக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.    

வெப்துனியாவைப் படிக்கவும்