டி.சி.எஸ்., மிட்சுபிஷி கூட்டு முயற்சி - ஜப்பானில் புதிய கல்வி நிறுவனம்

செவ்வாய், 2 செப்டம்பர் 2014 (19:39 IST)
டி.சி.எஸ் ஜப்பான் தொழில்நுட்பம் மற்றும் கல்வி நிறுவனத்தை 2014 செப்டம்பர் 2 அன்று பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பானில் தொடங்கி வைத்தார். 


 
இந்நிறுவனத்தில் இருந்து டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டி.சி.எஸ்) நிறுவனத்தில் பயிற்சி பெறுவதற்காக இந்தியாவிற்கு வருகை தரும் முதல் அணி மாணவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார். டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மற்றும் மிட்சுபிஷி கார்ப்பரேஷனின் கூட்டு முயற்சியே இந்தக் கல்வி நிறுவனம்.
 
இதனைத் தொடங்கி வைத்த பிரதமர், மாணவர்களிடம் பேசினார். அப்போது, இந்த 21ஆம் நூற்றாண்டு "அறிவு சார் நூற்றாண்டு" என்று கூறினார். டாக்ஸிலா மற்றும் நாலந்தா கல்வி நிறுவனங்கள் மூலம் கடந்த காலத்தில் உலகின் தலைமையாகவும் "அறிவு சார்" பாரம்பரியமாகவும் இந்தியா திகழ்ந்ததைப் பற்றி எடுத்துரைத்தார்.
 
இந்தியாவில் பயிற்சி முடித்து தங்கள் தாய்நாட்டிற்குத் திரும்பும் மாணவர்கள், இனிய நினைவுகளுடன் இந்திய தூதர்களாகச் செல்வர் என்றார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்