உலக பருவநிலை மற்றும் உயர்ந்து வரும் கடல் மட்டத்தின் அபாயத்தை உணர்த்து வகையில், இங்கிலாந்து நாட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புகைப்பட படப்பிடிப்பு ஒன்றில் ஆயிரக்கணக்காண ஆண்களும், பெண்களும் ஆடைகளின்றி நிர்வாணமாக கலந்து கொண்டனர்.
இங்கிலாந்தில் உள்ள துறைமுக நகரமான 'ஹல்' நகரத்திற்கு "சிட்டி ஆஃப் கல்ச்சர்” என்ற சிறப்பு பெயர் 2017-ஆம் ஆண்டு அளிக்கப்படவுள்ளது. அதனை சிறப்பிக்கும் வகையில் அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற புகைப்பட கலைஞரான ஸ்பென்சர் டியூனிக் என்பவர் "சீ ஆஃப் ஹல்" என்ற பெயரில் ஒரு புகைப்பட படப்பிடிப்பு நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
குளிரையும் பொருட்படுத்தாமல், அதிகாலை 3 மணிக்கு, ஏராளமான மக்கள் திரண்டனர். அதன்பின், தங்கள் ஆடைகளை களைந்து உடலில் தண்ணீரை குறிக்கும் வகையில் நிற வண்ணம் பூசிக்கொண்டு நிர்வாணமாக நின்றனர். மொத்தம் 20 நாடுகளைச் சேர்ந்த சுமார் 3200 பேர் இந்த நிர்வாண புகைப்பட படப்பிடிப்பில் கலந்து கொண்டனர்.