கொரொனா கால ஊரடங்கின்போது, பெரும்பாலான நாடுகளில் இளைஞர்களுக்கு வேலையில்லாமல் போனது.
இந்த நிலையில் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. ஆனால், ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி ஏற்பட்டதும், அங்கு நிலைமை மாறியது.
பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக அங்குள்ள பெண்களுக்கு. இந்த நிலையில், ஆப்கான் நாட்டைச் சேர்ந்த பல தொலைக்காட்சிகளில் டிவி தொகுப்பாளராகப் பணியாற்றி வந்த மெளாசா முகம்மாதி என்பவர், வேலைவாய்ப்பை இழந்து தற்போது வருமானமின்றி வறுமையில் வாடுகிறார். எனவே குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டி தெருவோரம் சமோசா விற்கிறார்.