குரங்குகள் பயன்படுத்திய கல் சுத்தி - பிரேசிலில் கண்டுபிடிப்பு

செவ்வாய், 12 ஜூலை 2016 (21:40 IST)
பிரேசிலில், குரங்குகளால் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் பழங்கால கல் கருவிகள் இருந்ததற்கான ஆதாரத்தை அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
 

 
குரங்குகள் கொட்டையை உடைக்கப் பயன்படுத்திய கற்களை ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தோண்டியெடுத்துள்ளனர். இவை சுமார் 700 ஆண்டுகள் பழையனவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
 
இந்தக் கல் சுத்திகள் போன்ற ஆயுதங்கள் மீது , பல நூற்றாண்டு கால முந்திரிப்பருப்பு எண்ணெய்க் கறை படிந்திருந்தது. இவை இப்போதும் கப்புச்சின் இனக் குரங்குகள் வசிக்கும் பகுதியில் மரங்களின் கீழ் பூமியில் புதையுண்டு கிடந்தன.
 
மனிதக் குரங்குகள் முதல் காக்கைகள் வரை, மனிதரல்லாத வேறு பல ஜீவராசிகள் கருவிகளைப் பயன்படுத்தியதைக் காட்டும் மிகச் சமீபத்திய ஆதாரம் இந்தக் ஆண்டுபிடிப்பாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்