சினிமா பாடல்களை வைத்து தீவிரவாதிகளை மிரட்டிய ராணுவம்

வியாழன், 2 ஜூன் 2016 (15:02 IST)
உலகையே அச்சுறுத்தும் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு பாலிவுட் பாடல்களை வைத்து ரணுவம் அதிர்ச்சி அளித்துள்ளது.


 

 
லிபியா நாட்டில் அட்டகாசம் செய்து வரும் ஐஎஸ் தீவிரவாதிகளை அழிக்க அந்நாட்டு ராணுவத்துக்கு இங்கிலாந்து ராணுவ படையினர் பயிற்சி அளித்து வருகின்றனர். பாகிஸ்தானை பிறப்பு இடமாக கொண்ட இங்கிலாந்து உளவுத் துறை அதிகாரி ஐஎஸ் தீவிரவாதிகளை தாக்க சினிமா பாடல்களை ஒலிபரப்பு செய்து வருகிறார்.
 
சினிமா பாடல்கள் கேட்பது இஸ்லாமியத்திற்கு எதிரான ஒன்று என்பதால் அந்த உளவுத் துறை அதிகாரி இந்த புதிய திட்டத்தை கொடுத்துள்ளார், அதுவும் வேலை செய்து வருகிறது.
 
இதனால் தீவிரவாதிகள் பதிங்கி இருக்கும் இடங்களில் பாலிவுட் சினிமா பாடல்கள் ஒலிபரப்பப்பட்டுள்ளது. அதுவும் குறிப்பாக சிர்தே நகர் அருகே பாலிவுட பாடல்கள் தொடர்ந்து ஒலிபரப்பப்பட்டதால் தீவிரவாதிகள் கோபம் அடைந்துள்ளனர். அந்த சிர்தே நகரில் மட்டும் சுமார் 4 ஆயிரம் தீவிரவாதிகள் உள்ளதாக கருதப்படுகிறது. 
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்