குழந்தைகளின் நிர்வாணப்படங்களை வைத்திருந்த மைக்கேல் ஜாக்சன்!

புதன், 22 ஜூன் 2016 (17:03 IST)
பாப் இசை உலகில் மன்னராக  திகழ்ந்தவர் மைக்கேல் ஜாக்சன். லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்ட மைக்கல் ஜாகசன் கடந்த 2009-ம் ஆண்டு அளவுக்கு அதிகமாக வலி நிவாரண மருந்துகள் உட்கொண்டதால் மாரடைப்பால் மறைந்தார்.


 
 
மைக்கல் ஜாக்சன் மறைந்தாலும் அவர் மீதானா பாலியல் குற்றச்சாட்டுகள் அவ்வப்போது வெளிந்தவாறே உள்ளன. மைக்கேல் ஜாக்சன் பல்வேறு சிறுவர்களுடன்   தவறான முறையில் நடந்து கொண்டதாக சில தகவல்களை 1998-இல் வெளியிட்டது அமெரிக்காவின் எஃப்.பி.ஐ.
 
இந்நிலையில் கடந்த 2003-ஆம் ஆண்டு மைக்கல் ஜாக்சனின் வீட்டில் நடத்திய சோதனையில் சிக்கிய படங்களை தற்போது நீதிமன்ற அனுமதியுடன் வெளியிட்டுள்ளனர்.
 
அனாதை விடுதிகளை நடத்தி வந்த மைக்கல் ஜாக்சன் அங்குள்ள குழந்தைகளை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதாக குற்றச்சாட்டிற்கு ஆளாகினார். இந்நிலையில் மைக்கல் ஜாக்சனின் பண்ணை வீட்டில் கடந்த 2003-ஆம் ஆண்டு அதிரடியாக நுழைந்த காவல் துறையினர் சோதனை நடத்தினர்.
 
இந்த சோதனையின் போது அவரது அறையில் இருந்து 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் நிர்வாணப்படங்கள், நிர்வாணப்பட தொகுப்புகள் அடங்கிய புத்தகங்கள், வீடியோக்கள் போன்றவை அதிகமாக இருந்துள்ளன.
 
இதனை கைப்பற்றிய காவல் துறையினர், குழந்தைகளை பாலியல் வன்முறைக்கு உட்படுத்துவதற்காக மைக்கேல் ஜாக்சன் இதுபோன்றவற்றை பயன்படுத்தியுள்ளார் என தெரிவித்தனர். தற்போது அந்த புகைப்படத்தினை நீதிமன்ற அனுமதியுடன் வெளியிட்டுள்ளனர்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்