சூரியனை சுற்றி வரும் புதனின் சுற்றுப்பாதை பூமியின் சுற்றுப்பாதையை விட மிக சிறியது. அதனால் பூமியும் புதனும் சூரியனிக்கு நேர் எதிர்திசையில் சந்தித்து கொள்வது மிகவும் அபூர்வமான நிகழ்வாக கருதப்படுகிறது. நிகழ்தகவு கணக்கீட்டின்படி ஒரு நூற்றாண்டுக்கு 13 முறை மட்டுமே புதன் சூரியனை தாண்டி செல்வதை பூமியிலிருந்து காண முடியும்.
21ம் நூற்றாண்டில் 2003, 2006 மற்றும் 2016ம் ஆண்டுகளில் இந்த அரிய நிகழ்வு நடந்துள்ளது. அதற்கு பிறகு இந்த ஆண்டு மீண்டும் இந்த நிகழ்வு நடைபெறுகிறது. சூரியனுக்கு மிக அருகில் உள்ள புதன் கோள் மிகவும் சிறிய அளவு கொண்டது என்பதால் ஒரு கறுப்பு புள்ளி போலவே தெரியும். மேலும் இதை வெறும் கண்களால் பார்க்க இயலாது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.