ரத்ததானம் செய்து பல மில்லியன் குழந்தைகளை காப்பாற்றிய முதியவர்: எப்படி தெரியுமா?

வியாழன், 17 மே 2018 (11:57 IST)
ஆஸ்திரேலியாவை சேர்ந்த முதியவர் ஒருவர் தனது வாழ்நாளில் 1,173 முறை ரத்த தானம் செய்து 2.4 மில்லியன் குழந்தைகளை காப்பாற்றி சாதனைப்படைத்துள்ளார்.
 
ஆஸ்திரேலியா மாகாணத்தில் உள்ள சிட்னி நகரை சேர்ந்த 81 வயதாகும் ஜேம்ஸ் ஹாரிசன் என்பவர் தனது வாழ்நாளில் 1,173 முறை ரத்த தானம் செய்து சாதனைப்படைத்துள்ளார். இதன்மூலம் 2.4 மில்லியன் குழந்தைகள் காப்பாற்ற பட்டுள்ளனர்.
 
இவர் தனது 14 வயதில் அறுவை சிக்கிசை செய்வதற்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது இவரது ரத்தத்தை பரிசோதித்த மருத்துவர்கள் ரத்தத்தில் வித்தியாசமான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆண்டி-டீ திறன்  இருப்பதை கண்டறிந்தனர். இந்த ரத்தத்தின் மூலம் வயிற்றில் இருந்து பிறக்கும் குழந்தைகளுக்கு கிமோலைட்டிக் என்ற நோயைக் எதிர்க்கும் சக்தி உண்டாகும்.
 
இதனால் இவரது ரத்தம் கற்பமாக உள்ள பெண்களுக்கு அளிக்கப்பட்டு இதுவரை 2.4 மில்லியன் குழந்தைகள் காப்பாற்றபட்டுள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்