தொடரும் காஸா சோகம்:
ஜெரூசலேத்தில் இஸ்ரேலுக்கான புதிய தூதரகத்தை அமெரிக்கா திறந்துள்ள நிலையில், காஸாவில் நடைபெற்று வந்த மோதல்களில் குறைந்தது 58 பாலத்தீனர்கள் இஸ்ரேலிய படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாக பாலத்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பேசுவோம்.. ஆனால் சுதந்திரம் கிடையாது:
கேட்டலோனியா பிராந்திய அரசைத் தலைமை ஏற்க தேர்ந்தேடுக்கப்பட்ட, கேட்டலோனியா சுதந்திரத்தை ஆதரிக்கும் தலைவரான க்விம் டோர்ராவை சந்திக்கத் தயாராக உள்ளதாக ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜாய் கூறியுள்ளார். ஆனால், கேட்டலோனியா சுதந்திரத்திற்கு அனுமதிக்க முடியாது என ரஜாய் அழுத்தமாகக் கூறியுள்ளார்.