கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஒரு கார் விபத்தில் பாதம் பாதிக்கப்பட்டதால், அந்த வலியை குறைக்க, மருத்துவர்கள் வலி நிவாரணி மாத்திரையைப் பரிந்துரைத்தனர். வலி தொடர்ச்சியாக இருந்ததால் வலி நிவாரணியை தொடர்ந்து பயன்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், இவருக்கு இவரது காதலியின் மீது காதல் குறைந்துகொண்டே வந்துள்ளது. காதலிக்கு மன வருத்தம் ஏற்பட்டு, அடிக்கடி சண்டை போட்டுக்கொண்டுள்ளனர்.
ஆனால், காதலி மீதுதான் ஆர்வம் குறைந்ததே தவிர, பிற ஆண்களைப் பார்க்கும்போது இவருக்கு காதல் ஊற்றெடுத்தது. காதலி, உறவை முறித்துக்கொண்டு சென்றுவிட்டார். ஆனால், காதல் பிரிவு குறித்து இவருக்கு வருத்தமோ வலியோ இல்லை.
எனவே, வலி நிவாரண மாத்திரைக்கும் தன்னுடைய விருப்ப மாற்றத்துக்கும் தொடர்பு உண்டா என்று ஆராய்ச்சி செய்துள்ளார். இறுதியில் ஓரினசேர்க்கையாளராக மாறியதற்கு காரணம் இந்த மாத்திரைதான் என்ற முடிவுக்கு வந்துள்ளார்.