தன் எடைக்கு மீறிய எடையைத் தூக்கிச் சிறுமி சாதனை ! குவியும் பராட்டுகள்

வெள்ளி, 11 டிசம்பர் 2020 (22:04 IST)
கனடா நாட்டிலுள்ள ஒட்டாவா என்ற பகுதியில் வசித்து வருபவர் ரோரி வான் உஃப்ட். இவருக்கு 7 வயதுதான் ஆகிறது. ஆனால் வயதிற்கும் சாதனைக்கும் சம்பந்தமில்லை என்று எல்லோரும் கூறுவதுபோல் இச்சிறுமியும் சாதனைப் படைத்துள்ளார்.

அதவாது , அங்குள்ள பளுதூக்கும் போட்டியில் 11 மற்றும் 13 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் கலந்து கொண்ட சிறுமி ரோரி வான் உஃப்ட்,  டெட் லிப்டிங் முறையில் 80 கிலோ, ஸ்னாட்ச் முறையில் 32 கிலோ, கிளீன் அண்ட் ஜெர்க் முறையில் 43 கிலோ, ஸ்வாகுட் முறையில் 61 கிலோ பளுதூக்கி உலகையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.

ரோரி வான் உஃப்ட் 4 அடி உயரம் மட்டும் உள்ளார். மேலும் தனது சிறுவயது முதலாகவே அவர் பளு தூக்கும் முயற்சியிலும் பயிற்சியிலும் ஈட்டுபட்டுள்ளதால் அவரால் இதைச் சாதிக்கமுடிந்துள்லதாகத் தெரிவித்துள்ளார் அவர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்