சீனாவை தாக்கிய “லெகிமா”: 10 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேற்றம்

ஞாயிறு, 11 ஆகஸ்ட் 2019 (10:34 IST)
பலம்வாய்ந்த லெகிமா புயல் தாக்கியதில் சீனாவின் பல பகுதிகள் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளன.

சூப்பர் புயல் என சீனர்களால் அழைக்கப்பட்ட லெகிமா புயல் சீனாவுக்கும், தைவானுக்கும் இடையே ஷாங்காய் பகுதியில் கரையை கடந்தது. 187கி.மீ வேகத்தில் வீசிய காற்றில் மரங்கள், மின்கம்பங்கள் வேராடு சாய்ந்தன. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. புயல் தாக்கிய பகுதிகளில் இருந்து 10 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

புயலுக்கு முன்பு பெய்த கனமழையால் ஏற்கனவே பல நகரங்கள் மழை வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டன. புயலிலும், வெள்ளத்திலும் சிக்கி 22 பேர் உயிரிழந்துள்ளனர். 10 பேர் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை.

அன்குய், புஜியான், ஜியாங்சு ஆகிய நகரங்கள் புயலால் முழுமையாக சேதம் அடைந்துள்ளன. மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்