பூமியை நெருங்கும் ராட்சத விண்கல்: நாசா தகவல்

வெள்ளி, 2 செப்டம்பர் 2016 (13:36 IST)
பூமியை நோக்கி ராட்சத விண்கல் ஒன்று நெருங்கி வந்து கொண்டிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 


 

 
பூமியை நோக்கி ஒரு விண்கல் வந்து கொண்டிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த விண்கல் இதுவரை விஞ்ஞானிகளின் ஆய்வு எல்லைக்குள் தென்படவில்லை என்றும் தற்போது திடீரென்று பூமிக்கு அருகில் வந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
 
35 மீட்டர் நீளமுடைய இந்த விண்கல் பூமிக்கும் சந்திரனுக்கும் இடையில், கால் மடங்கு தூரத்தில் பூமியிலிருந்து விலகிச் செல்லும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த விண்கல்லால் பூமிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்