நேற்று வரை பிச்சைக்காரி; இன்று கோடீஸ்வரி! – லெபனானை அதிரவைத்த பாட்டி!

வெள்ளி, 4 அக்டோபர் 2019 (13:51 IST)
லெபனானில் பிச்சையெடுத்து வாழ்ந்து வந்த வயதான பெண்மணி ஒருவரின் வங்கி கணக்கில் கோடிக்கணக்கில் பணம் இருந்தது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

லெபனான் நாட்டில் உள்ளது சிடான் நகரம். அங்குள்ள மருத்துவமனை வாசலில் பிச்சையெடுத்து கால ஜீவனம் செய்து வந்தார் ஹஜ் வாஃபா முகமது அவத் என்ற மூதாட்டி. பல ஆண்டுகாலமாக அந்த மருத்துவமனை வாசலில் பிச்சையெடுத்து வந்த அந்த மூதாட்டி அன்றாட செலவுகள் போக மீத தொகையை வங்கி ஒன்றில் டெபாசிட் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் அந்த வங்கி மூடப்பட்டது. அந்த வங்கியில் கணக்கு வைத்திருந்தவர்களது டெபாசிட் தொகையை அரசாங்கம் திரும்ப அளிப்பாதாக வாக்கு கொடுத்திருந்தது. அதன்படி மூதாட்டிக்கும் அவரது சேமிப்பு பணத்திற்கான செக் வழங்கப்பட்டது. அவரது சேமிப்பு பணம் மொத்தமாக 3.3 மில்லியன் லெபனான் பவுண்டுகள். இந்திய மதிப்பின்படி சுமார் 6 கோடியே 30 லட்சம் ரூபாய்!

இவ்வளவு பணம் தன்னிடம் இருப்பதை அறியாமலே தினசரி மருத்துவமனையில் பிச்சையெடுத்து வந்திருக்கிறார் அந்த மூதாட்டி. நேற்றுவரை பிச்சையெடுத்து வந்தவர் இன்று கோடீஸ்வரி என்று தெரிந்திருப்பது அந்த பகுதி மக்களை ஆச்சர்யத்தில் வாய் பிளக்க செய்திருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்