கிம் உயிருடன் இருக்கிறார்! ஆனால் நடக்க முடியாது! – முன்னாள் தூதரக அதிகாரி பேட்டி!

வியாழன், 30 ஏப்ரல் 2020 (08:29 IST)
வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் குறித்து பல்வேறு வதந்திகள் வலம் வரும் நிலையில் முன்னாள் தூதரக அதிகாரி ஒருவர் அதிபர் உயிருடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

கடந்த 11ம் தேதிக்கு பிறகு பொதுவெளியில் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் தென்படாத நிலையில் அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதாகவும், அவர் இறந்து விட்டதாகவும் பல்வேறு செய்திகள் வெளிவந்தன.

இதனால் உலகம் முழுவதும் பரபரப்பு எழுந்த சூழலில் தென்கொரியா இந்த செய்திகளை மறுத்துள்ளது. மேலும் கிம் நலமுடன் இருப்பதாகவும் அது தொடர்ந்து கூறி வருகிறது.

இந்நிலையில் வட கொரொயாவில் தூதரக அதிகாரியாக பணியாற்றி பின்னர் அந்த நாட்டை விட்டு வெளியேறிய தே யாங் ஹோ , கிம் காங் அன் உயிருடன் இருக்கிறார் என்றும், ஆனால் அவரால் எழுந்து நிற்கவோ, நடக்கவோ முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவருக்கு காயம்பட்டதா, அறுவை சிகிச்சை நடந்ததா என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்