ராணுவத்தை விமர்சித்த ஊடகவியலாளர் வெட்டிக் கொலை !பரபரப்பு சம்பவம்

செவ்வாய், 18 ஜூன் 2019 (17:11 IST)
இஸ்லாமிய நடைமுறை நாடான பாகிஸ்தானில் அந்நாட்டு பிரதமரின் ஆலோசனை அந்நாட்டு ராணுவத்தினர் கேட்பதில்லை என்றும் தன்னிச்சையான முடிவுகளை எடுப்பவர்கள் என்றும் பொதுவாக விமர்சனங்கள் உண்டு. இந்நிலையில்  இஸ்லாமிய தேசமான பாகிஸ்தான் ராணுவத்தை விமர்சித்து வந்த ஊடகவியலாளர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டார்.
தற்போது வெட்டிக்கொல்லப்பட்ட  முகமது பிலால் கானுக்கு  அவரது டுவிட்டர் பக்கத்தில் 16, 000 பாலோயர்களும், யூடியூப் , ஃபேஸ்புக் பக்கத்தில் 22000 பாலோயர்களும் உள்ளனர்.
 
இந்நிலையில் நேற்று அவர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கொல்லப்பட்டதாக அந்நாட்டு போலீஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் முகமது பிலால் கான் நேற்று நண்பருடன் வெளியில்ம் சென்றிருந்த போதுதான் மர்மநபர்கள் வெட்டிக்கொண்டுள்ளனர், இதில் அவரது நண்பருக்கும் பலத்த காயம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.
 
அவர் ராணுவத்தை கடுமையாக விமர்சித்ததால்தான் இப்படி கொலைசெய்ப்பட்டுள்ளதாக டுவிட்டரில் உள்ள  அவரது பாலோயர்ஸும், நெட்டிசன்களும் கூறி விமர்சித்துவருகிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்