இந்நிலையில் தனக்கும் இன்ஸ்டாகிராம் தலைமை செயல் அதிகாரி ஆடம் மொசெய்ரிக்கும் ரகசிய உறவு இருப்பதாகவும், தனது ஆபாசப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வெளியாக அவர் காரணமாக இருந்ததாகவும் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
அவரது கணக்கு முடக்கப்பட்டது குறித்து விளக்கமளித்துள்ள இன்ஸ்டாகிராம் “உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்கள் இன்ஸ்டாகிராமை உபயோகித்து வருகின்றனர். சில சமயங்கள் அதில் தவறுகள் நடந்துவிடுகின்றன. கேண்ட்ரா சண்டர்லேண்ட் எங்களது இன்ஸ்டாகிராம் கொள்கைகளை மீறி புகைப்படங்கள் வெளியிட்டதால் அவரது கணக்கு முடக்கப்பட்டுள்ளது. எங்கள் தலைமை செயல் அதிகாரிக்கும், அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை” என கூறியுள்ளது.