குட்டி தீவை சுறையாடிய யசா பெரும்புயல்! – இரண்டு லட்சம் மக்கள் பாதிப்பு!

வெள்ளி, 18 டிசம்பர் 2020 (11:18 IST)
தென் பசிபிக் கடலில் உள்ள குட்டி தீவான ஃபிஜியை பெரும்புயல் சூறையாடியதால் அந்நாட்டு மக்கள் வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர்.

தென் பசிபிக் கடலில் உள்ள தீவு கூட்டங்களில் சிறியதாக உள்ள தீவு ஃபிஜி. குறைவான மக்களே வாழும் இந்த சின்ன தீவின் அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அதி தீவிர புயலாக மாறிய நிலையில் அதற்கு யசா என பெயரிடப்பட்டது.

புயல் அறிகுறிகளில் ஆபத்தான 5ம் நிலை புயலான இது ஃபிஜி தீவில் கரை கடந்த நிலையில் ஃபிஜி தீவு பெரும் சேதத்தை சந்தித்துள்ளது. சிறிய குழந்தைகள் உட்பட 5 பேர் இதுவரை இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்கொண்டு சேதாரம் மற்றும் உயிரிழப்புகளை ஆய்வு செய்யும் பணிகளும் நடந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்