1 மணி நேரம் 25 நிமிடங்கள் அமெரிக்க அதிபராக கமலா ஹாரிஸ்!!
சனி, 20 நவம்பர் 2021 (09:06 IST)
1 மணி நேரம் 25 நிமிடங்கள் தற்காலிக அமெரிக்க அதிபராக கமலா ஹாரிஸ் பதவி வகித்தார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பாக துணை அதிபர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றவர் இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ். இவர் அமெரிக்காவின் தற்காலிக அதிபராக பொறுப்பேற்றார். இவருக்கு இந்த அதிகாரத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வழங்கினார்.
அதிபர் ஜோ பைடன் மருத்துவ பரிசோதனைக்காக சென்ற போது அவருக்கு பெருங்குடல் தொடர்பாக, மயக்கவியல் முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது தனது அதிபருக்குள்ள அதிகாரத்தை துணை அதிபர் கமலா ஹாரிஸ்க்கு தற்காலிகமாக வழங்கினார்.
மேலும் இது குறித்து வெள்ளை மாளிகை தரப்பில், 1 மணி நேரம் 25 நிமிடங்கள் தற்காலிக அமெரிக்க அதிபராக அதிபர் ஜோ பைடன் மருத்துவ பரிசோதனைக்காக சென்ற போது கமலா ஹாரிஸ் பதவி வகித்தார் என குறிப்பிட்டுள்ளது.
இதன் மூலம் கமலா ஹாரிஸ் மேற்குப் பகுதியில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்து அமெரிக்க ஜனாதிபதி அதிகாரங்களை வைத்திருந்த முதல் கறுப்பின மற்றும் தெற்காசிய அமெரிக்கர் என்ற பெருமையைப் பெற்றார்.