உக்ரைன் முன்னதாக நேட்டோ அமைப்பில் இணையவிருந்த நிலையில் ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடர்ந்தது. கடந்த 100 நாட்களுக்கும் மேலாக நீடிக்கும் இந்த போரினால் உக்ரைனின் பல பகுதிகள் நாசமாகியுள்ளன. மக்கள் பலர் உயிரிழந்துள்ள நிலையில், பலர் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு அடைக்கலம் தேடி சென்றுள்ளனர்.
இந்த சூழலில் இதுகுறித்து சமீபத்தில் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் “இரண்டாம் உலக போருக்கு பின் இப்படி ஒரு சம்பவம் நடந்ததில்லை. நான் மிகைப்படுத்தி சொல்வதாக பலர் நினைக்கலாம். ஆனால் ரஷ்ய அதிபர் உக்ரைன் மீது போர் தொடங்க தயாராகி வருகிறார் என்பதை உறுதி செய்ய போதுமான தகவல்கள் எங்களிடம் இருந்தன. அதை கேட்க உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விரும்பவில்லை” என்று கூறியுள்ளார்.