அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் பதவி விலகினார்! – அடுத்த தலைவர் யார்?
திங்கள், 5 ஜூலை 2021 (12:12 IST)
அமேசான் நிறுவனத்தை தொடங்கிய ஜெஃப் பெசோஸ் இன்று தலைவர் பதவியிலிருந்து விலகும் நிலையில் புதிய நபர் அந்த பொறுப்பை ஏற்க உள்ளார்.
உலகம் முழுவதும் ஆன்லைன் ஷாப்பிங்கில் கொடிக்கட்டி பறக்கும் நம்பர் 1 நிறுவனமாக அமேசான் உள்ளது. மேலும் ப்ரைம் வீடியோ, ம்யூசிக், இ புத்தகங்கள், கிண்டில், அலெக்ஸா என பல தடங்களிலும் கால் பதித்துள்ளது அமேசான் நிறுவனம்
ஆன்லைனில் புத்தகங்களை விற்பனை செய்வதற்காக தொடங்கப்பட்ட அமெசான் நிறுவனம் இன்று உலகின் முன்னோடி மின்னணு வர்த்தக நிறுவனமாக விளங்கி வருகிறது. இந்த நிறுவனம் 27 ஆண்டுகளுக்கு முன்பு 1994ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி தொடங்கப்பட்டது
இந்நிலையில் தற்போது அதே ஜூலை 5ம் தேதி நிறுவனர் ஜெஃப் பெசோஸ் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். ஜெஃப் பெசோஸ் முன்னரே தெரிவித்திருந்தபடி அமேசான் வெப் சிரிஸ் தலைவராக இருந்து வந்த ஆண்டி ஜாஸ்ஸி அமேசான் நிறுவன தலைமை செயல் அதிகாரி பதவியை ஏற்கவுள்ளார்.