மீண்டும் கார்ல்ஸனை வீழ்த்திய தமிழக சிறுவன் பிரக்ஞானந்தா!

சனி, 21 மே 2022 (16:27 IST)
கடந்த ஜனவரி மாதம் இத்தாலியில் நடந்த வெர்கானி கோப்பை செஸ் போட்டித் தொடரில் கலந்துகொண்ட 14 வயது பரத்சுப்ரமணியன் என்ற சிறுவன் இந்தியாவின் 73 ஆவது கிராண்ட்மாஸ்டராக உருவாகியுள்ளார். கிராண்ட்மாஸ்டர் ஆவதற்கான 2500 புள்ளிகள் மற்றும் மூன்றாவது கிராண்ட்மாஸ்டர் நெறி ஆகியவற்றைப் பெற்றதை அடுத்து இந்தியாவின் அடுத்த கிராண்ட்மாஸ்டரானார்.

இந்நிலையில் தற்போது அவர் உலக செஸ் சாம்பியனான கார்ல்ஸனை இரண்டாவது முறையாக வீழ்த்தியுள்ளார். ஆன்லைன் வழியாக நடந்த இந்த போட்டியில் பரபரப்பாக சென்ற நிலையில் 40 ஆவது மூவில் கார்ல்ஸன் செய்த சிறுதவறால் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார். இரண்டாவது முறையாக இதன் மூலம் அவர் உலக செஸ் சாம்பியன் கார்ல்ஸனை வெற்றி கொள்கிறார். கடந்த பிப்ரவரி மாதம் இதுபோல ஆன்லைன் வாயிலாக நடந்த போட்டியில் கார்ல்ஸனை முதல்முறையாக வீழ்த்தினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்