காஸா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: 10 பேர் கொலை!

சனி, 6 ஆகஸ்ட் 2022 (09:04 IST)
காஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. மேற்கு கரை மற்றும் காஸா முனை பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

மூன்று நாட்களுக்கு முன்பு இஸ்ரேல் படைகள் மேற்கு கரை பகுதியில் பதுங்கி இருந்த ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் முக்கிய தலைவரை கைது செய்த நிலையில், நேற்று இரவு காஸா முனையின் மத்திய பகுதியில் வான்வழி தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது.

இதில் ஹிமாஸ் பயங்கரவாத அமைப்பின் மூத்த தளபதி உட்பட 10 பேர் கொல்லப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், பலர் படுகாயமடைந்தனர். அதேவேளை, இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களில் 5 வயது குழந்தை, 23 வயது பெண்ணும் அடக்கம் என பாலஸ்தீன சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

அதோடு இந்த தாக்குதலில் குறைந்தது 15 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்