கோடைக்காலத்தில் மற்றொரு கொரோனா அலை..? – மருத்துவ நிபுணர்கள் தகவல்!

வியாழன், 5 மே 2022 (09:02 IST)
உலகம் முழுவதும் இந்த கோடைக்காலத்தில் கொரோனாவின் புதிய திரிபால் புதிய அலை உருவாகலாம் என இஸ்ரேல் மருத்துவ ஆராய்ச்சி நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகம் முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக கொரோனாவால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் பலியாகியுள்ளனர். அவ்வபோது கொரோனா பாதிப்புகள் குறைந்தாலும் புதிய மாறுபாடு அடைந்த வைரஸ்களால் ஏற்படும் புதிய அலையால் மீண்டும் பாதிப்புகள், உயிரிழப்புகள் அதிகரிக்கும் நிலை தொடர்ந்து வருகிறது.

சமீபத்தில் டெல்டா, ஒமிக்ரான் வைரஸ்கள் ஏற்படுத்திய அலையிலிருந்து மக்கள் மீண்ட நிலையில் பாதிப்புகளும் குறைந்துள்ளன. இந்நிலையில் இஸ்ரேலின் பென் குரியன் பல்கலைகழக நிபுணர்கள் நடத்திய ஆய்வில் கோடைக்காலத்தில் புதிய அலை ஏற்படலாம் என தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கூறியுள்ள நிபுணர்கள் “புதிய திரிபு உருவாகும்போது அது தனக்கு முந்தைய திரிபை வீழ்த்தும் என்றே நம்பப்பட்டு வந்தது. ஆனால் முந்தைய திரிபுகள் ரகசியமாக தங்கள் பரவலை மேற்கொள்வதை ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. எனவே கோடைக்காலத்தில் மற்றொரு புதிய திரிபால் புதிய அலை உருவாகும் வாய்ப்புள்ளது:” என தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்