லெபனான் பேஜர் தாக்குதலுக்கு உத்தரவிட்டது நான்தான்: ஒப்புக்கொண்ட இஸ்ரேல் பிரதமர்!

Mahendran

திங்கள், 11 நவம்பர் 2024 (11:46 IST)
லெபனான்  நாட்டில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நடந்த பேஜர் தாக்குதலில் பெரும் உயிரிழப்பு ஏற்பட்ட நிலையில், இந்த தாக்குதலுக்கு உத்தரவிட்டது நான் தான் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒப்புக்கொண்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

லெபனான் நாட்டில் தகவல் பரிமாற்றத்திற்கு ஆயிரக்கணக்கான பேர் பேஜர் பயன்படுத்தி வந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் அவை வெடித்து சிதறியதால் 40 பேர் பலியாகியதாகவும், 3000 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியானது.

லெபனான் மீது இஸ்ரேல் படையினர் தொடர் குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டு தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இந்த பேஜர் தாக்குதல் பின்னணியில் இஸ்ரேல் அரசு இருப்பதாக லெபனான் குற்றம் சாட்டியிருந்தது.

இந்த குற்றச்சாட்டை இரண்டு மாதங்களுக்கு பின்னால் இஸ்ரேல் பிரதமர் தற்போது ஒப்புக் கொண்டுள்ளார். நேற்று இஸ்ரேல் அமைச்சரவை கூட்டத்தில் பேஜர் தாக்குதலுக்கு அனுமதி அளித்ததை அவர் ஒப்புக்கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இஸ்ரேல் பிரதமரின் இந்த அறிவிப்பு இருநாட்டின் இடையே மேலும் பகையை வளர்க்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.


Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்