ஒரே நேரத்தில் காசா, ஏமன், லெபனான் மீது அதிரடி தாக்குதல்! இஸ்ரேல் ராணுவம் தாண்டவம்!

Prasanth Karthick

ஞாயிறு, 21 ஜூலை 2024 (08:54 IST)

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையேயான மோதல் வலுப்பெற்றுள்ள நிலையில் இஸ்ரேல் ராணுவம் ஒரே சமயத்தில் காசா, லெபனான், ஏமன் என மூன்று பகுதிகளிலும் தாக்குதல் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் மீது பாலஸ்தீன ஆதரவு ஹமாஸ் அமைப்பு கடந்த ஆண்டு தாக்குதல் நடத்தியதோடு சில இஸ்ரேலியர்களை கடத்தி சென்றனர். அதை தொடர்ந்து இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் ஏற்பட்ட நிலையில், இஸ்ரேல் ராணுவம் காசாவிற்குள் புகுந்து வான்வழி, தரை வழி தாக்குதல்களை நடத்த தொடங்கியது.

இதனால் ஹமாஸ் கிளர்ச்சியாளர்களுடன், பொதுமக்களும் சேர்த்து 38 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தற்போது இஸ்ரேல் ராணுவம், பாலஸ்தீன மக்கள் தஞ்சமடைந்துள்ள ரபா நகரையும் தாக்கி வருகிறது. இந்நிலையில் ஹமாஸ் அமைப்பிற்கும், பாலஸ்தீனத்திற்கும் ஆதரவாக ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சி கும்பலும், லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளும் இஸ்ரேல் மீது இரு நாட்டு எல்லைகளில் இருந்தும் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
 

ALSO READ: கடுமையான ஊரடங்கு.. கண்டதும் சுட உத்தரவு.. கலவர பூமியான வங்கதேசத்தில் பதட்டம்..!

இந்நிலையில் இதற்கு பதிலடி நடவடிக்கையில் இறங்கிய இஸ்ரேல் ராணுவம் இன்று ஒரே நாளில் காசா, லெபனான், ஏமன் எல்லைகள் உட்பட 3 இடங்களிலும் அதிரடி தாக்குதலை நடத்தியுள்ளது.

ஏமனின் துறைமுகமான ஹூடைடா நகரம் மீதும், காசா முனையின் நஸ்ரத் முகாம், லெபனானின் அட்லோன் பகுதியில் உள்ள ஹிஸ்புல்லா ஆயுத கிடங்கு உள்ளிட்டவை மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மத்திய தரைக்கடல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்