வாட்ஸ்அப்பில் பெண்களை விற்கும் ஐஎஸ் தீவிரவாதிகள்

வியாழன், 7 ஜூலை 2016 (09:40 IST)
ஐஎஸ் தீவிரவாதிகள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராமில் பெண்களை விற்பணை செய்வது தெரியவந்துள்ளது.


 

 
ஈராக் மற்றும் சிரியாவில் சில பகுதிகளை ஐஎஸ் தீவிரவாதிகள் அவர்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அப்பகுதிகளில் வாழும் யாழிதி மற்றும் குர்து ஆகிய இனத்தை சேர்ந்த பெண்களை ஐஎஸ் தீவிரவாதிகள் சிறைபிடிப்பது வழக்கமாக மாறியுள்ளது.
 
சில மாதங்களுக்கு முன் பெண்களை கடத்தி, ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் உள்ளவர்களுக்கு பிள்ளை பெற்று தர கட்டாயப்படுத்தினர். அதற்கு ஒப்புகொள்ளாத பெண்களை கொலை செய்தனர். தற்போது சுமார் 3,000 பெண்கள் மற்றும் சிறுமிகளை பாலியல் அடிமைகளாக வைத்துள்ளனர். 
 
மேலும் சந்தையில் பொருட்களை விற்பனை செய்வது போல் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் மூலம் பெண்களின் விற்பனை குறித்து அவர்கள் விளம்பரம் செய்து வருகின்றனர். விளம்பரத்தில் அடிமைகளாக வைக்கப்பட்டிருக்கும் பெண்களின் புகைப்படம், வயது, விலை போன்ற விபரங்களை குறிப்பிட்டு ஒரு பொருளாக மாற்றி விட்டனர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்  

வெப்துனியாவைப் படிக்கவும்