அமெரிக்காவின் ரோட் தீவு பல்கலைக்கழகத்தில் பேராசியராகப் பணியாற்றும் மன்கோடியா, மனிதன் உடுத்தும் ஆடைகளில் சென்சார்களைப் பொருத்தி, அதன்மூலம் உடலில் ஏற்படும் மாற்றத்தைக் கண்டறிய முடியும் என்று நிரூபித்துள்ளார். இந்தவகை சென்சார்கள் உடலின் வெப்பநிலை மற்றும் வளர்சிதை மாற்றங்கள் உள்ளிட்டவைகள் குறித்த தகவல்களை மருத்துவர்களுக்கு அனுப்பும் வல்லமை பெற்றவை.
இன்றைய டிஜிட்டல் உலகத்தில் மனித உடலில் ஏற்படும் மாற்றத்தை ஆடைகளை வைத்தே கணிப்பது சாத்தியமாகும் நாள் வெகுதூரத்தில் இல்லை. இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் க்ளவுஸ்கள், பார்க்கின்ஸன் நோயின் அறிகுறிகளான விரல் அதிர்வுகள், விறைப்பு உள்ளிட்டவைகளை அடையாளம் காணுவதில் வெற்றி கண்டுள்ளது.